மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதுமைத் தோற்றத்தைத் தவிர்க்க உதவும் இயற்கைப் பொருள்கள்!

முதுமைத் தோற்றத்தைப் போக்க, அதாவது சருமச் சுருக்கத்தைப் போக்க இயற்கையாகவே சில பொருள்களை பயன்படுத்தி தீர்வைக் காணலாம். 

News image

கோப்புப்படம்

Updated On :5 பிப்ரவரி 2021, 10:17 am

தினமணி

முதுமை என்பது ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னை. முதுமை வயதில் மட்டுமல்ல, உடல் தோற்றத்தில், அழகிலும் வெளிப்படையாகத் தெரிகிறது.

அந்தவகையில் முதுமையிலும் அழகாகத் தெரிய வேண்டும் என்று பெண்கள் பலரும் விரும்புகின்றனர். முதுமையை வெளிக்காட்டும் சரும சுருக்கங்களைப் போக்க செயற்கை சிகிச்சை முறைகளைக் கூட எடுத்துக்கொள்கின்றனர். 

ஆனால், முதுமைத் தோற்றத்தைப் போக்க, அதாவது சருமச் சுருக்கத்தைப் போக்க இயற்கையாகவே சில பொருள்களை பயன்படுத்தி தீர்வைக் காணலாம். 

எலுமிச்சை 

சருமம் பொலிவு பெறவும், சருமத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்கவும் சிறந்த பொருள் எலுமிச்சை. இதில், வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பதால் சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குகிறது. சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கிறது. எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். 

கற்றாழை

சருமப் பராமரிப்புக்கு சிறந்த பொருள். கற்றாழை ஜெல்லை முகத்தில் தொடர்ந்து தடவிவர சருமத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி பொலிவு பெறும். 

வெள்ளரிக்காய்

சருமத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்க வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்ளை செய்து 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர முகத்தில் கருமை நீங்கி பொலிவாக இருக்கும். 

ரோஸ் வாட்டர் 

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. 

பப்பாளி

பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் வேதிப்பொருள் சருமத்தில் இறந்த செல்களை நீக்கி அழகை பராமரிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.