மாலையில் பள்ளி விட்டு வீடு வரும் குழந்தைகள் மிகுந்த சோர்வுடன் இருப்பார்கள். அவர்களை உற்சாகப் படுத்த தினமொரு மாலை நேர ஸ்னாக்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கும் கூட இது கொஞ்சம் மாற்றமாக இருக்கும். அட போங்க இந்த தலைமுறை குழந்தைகள் எங்கே டிரடிஷனல் ஸ்னாக்ஸ் எல்லாம் சாப்பிட விரும்பறாங்க, அவங்களுக்கு ஜங்க் வகையறா ஸ்னாக்ஸ் ஐட்டங்களான கேக், பிரெட் டோஸ்ட், லேய்ஸ் சிப்ஸ், குர்குரே, அசைவம்னா சிக்கன் லாலிபாப், மட்டன் கபாப் தானே பிடிச்சிருக்கு. இப்படி புதுசா வீட்ல ஏதாவது ஸ்பெஷல் டிரெடிஷனல் ஸ்னாக்ஸ் எல்லாம் செய்து வச்சா சீண்டகூட மாட்டாங்க. அப்புறம் அதையும் பெரியவங்களே சாப்பிட்டுத் தீர்த்து உடல் எடையைக் கூட்டிக்க வேண்டியது தான் என்று புலம்பத் தொடங்கி விடாதீர்கள்.