பாகற்காயை தோல், விதை நீக்கி சுத்தம் செய்து நன்றாகக் கழுவி நீரை வடிகட்டவும். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, வெங்காயம் பொன்னிறமானதும் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு மசால் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாகப் பிரட்டி வதக்கி ஊற வைத்துக் கரைத்த புளித்தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு கொதி வந்ததும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து கொதிக்க விட்டு நன்கு கொதித்து வருகையில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும். குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மிதக்க சுண்டி மேலே வரும் போது அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.