வயிற்றுப் புண் உபாதை தீர்க்கும் அதிமதுர மூலிகைப் பால் ரெஸிப்பி!

சுக்கு, பனைவெல்லம் கலந்து அதிமதுரப் பால் தயாரிக்க வேண்டும். இந்தப் பாலை நன்கு ஆற வைத்துப் பின் அருந்துவதால் வயிற்றுப் புண் உபாதை உடனடியாகக் குறைய வாய்ப்புண்டு என சித்த மருத்துவம் கூறுகிறது.
வயிற்றுப் புண் உபாதை தீர்க்கும் அதிமதுர மூலிகைப் பால் ரெஸிப்பி!

அதிமதுரம் அனைத்து வகை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

வாதம், பித்தம், கபம் எனும் முப்பிணியால் ஏற்படும் உபாதைகளைப் போக்க வல்லது அதுமதுரம். அதி மதுரம் என்றால் அதிக இனிப்பு என்று பொருள். அடிப்படையில் இது ஒரு மூலிகைச்செடியின் வேர். மேலே சொல்லப்பட்ட மூவகைப் பிணிகளாலும் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடிய திறன் அதிமதுரத்துக்கு உண்டு.

  • இது இயல்பாகவே இனிப்புச் சுவை கொண்டதாக இருப்பதால் தினமும் ஒரு அரை தேக்கரண்டி அளவில் அதுமதுரப் பொடியை எடுத்துக் கொண்டு அதை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதிமதுர தேனீர் என்ற பெயரில் அருந்தலாம். இதுவே இனிப்பாகத்தான் இருக்கும்...
  • மேலும் இனிப்பு தேவை என நினைப்பவர்கள் இதில் கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் பனைவெல்லம், ஏலம் எல்லாம் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டியும் அருந்தலாம். அதையும் அதிமதுர தேனீர் என்று தான் சொல்கிறார்கள். அதிமதுரத்தை இப்படி தினமும் அருந்தினால் அன்றன்றைக்கு உடலில் சேரக்கூடிய நஞ்சுகளை நீக்க அவை உதவும்.
  • அதிமதுரத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் நாம் சமைக்கக் கூடிய கஞ்சி அல்லது ரசத்தில் தூவியும் உண்ணலாம். அதன் பெயர் அதிமதுர ரசம். சற்றே இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
  • அதிமதுரப் பொடியை தேனில் கலந்து அப்படியே சுவைத்தும் சாப்பிடலாம். இப்படிச் செய்வதால் வயிற்றுப் புண் வரும் அபாயத்திலிருந்து நமது உடல் ஆரோக்யத்தை வரும் முன் காத்து பலம் பெற வைக்கலாம்.

அதிமதுரப் பால் ரெசிப்பி:

தேவையான பொருட்கள்:

  • அதிமதுரம்: 3 அல்லது 5 சிறு வேர்
  • அதிமதுரச் சாறு: 1 டம்ளர்
  • தேங்காய்ப் பால்: 1 டம்ளர்
  • சுக்குப் பொடி : 1 சிட்டிகை
  • பனை வெல்லம்: தேவையான அளவு
  • ஏலம்: 1 சிட்டிகை

அதிமதுரத்தை ஒன்றிரண்டாகத் தட்டி அல்லது நசுக்கி எடுத்து 4 முதல் 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை அரைத்து ஒரு டம்ளர் அளவுக்குச் சாறு எடுத்து அந்தச் சாற்றை வெறு வாணலியை சூடாக்கி காய்ச்ச வேண்டும். அதிமதுரச் சாறு கொதித்ததும் அந்தச் சாறுடன் சம பங்கு தேங்காய்ப்பால் சேர்த்து அது ஒரு கொதி வந்ததும் சுக்கு, பனைவெல்லம் கலந்து அதிமதுரப் பால் தயாரிக்க வேண்டும். இந்தப் பாலை நன்கு ஆற வைத்துப் பின் அருந்துவதால் வயிற்றுப் புண் உபாதை உடனடியாகக் குறைய வாய்ப்புண்டு என சித்த மருத்துவம் கூறுகிறது.

நன்றி: செல்வ சண்முகம் (சித்த மருத்துவர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com