கேரளாவின் பாரம்பர்யப் பெருமை மிக்க  ‘அரக்கல் அரசி’ ஆயிஷா பீவி மரணம்!

அரக்கல் ராஜ்ஜியத்தின் 37 வது அரசியாகக் கருதப்படும் அரக்கல் பீவி 2006 ஆம் ஆண்டில் செப்டம்பர் 17 ல் அரக்கல் அரசியாகப் பதவியேற்றார்.
கேரளாவின் பாரம்பர்யப் பெருமை மிக்க  ‘அரக்கல் அரசி’ ஆயிஷா பீவி மரணம்!

அரக்கல் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அக்குடும்பத்தின் தலைவருமான அரக்கல் பீவி இன்று காலமானார். வயோதிகத்தின் காரணமாக மரணம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது பூர்வீக அரச இல்லமான தலசேரி, சிரக்காரா ராயல் ஹவுஸில் காலமானார். அவருக்கு வயது 93. அரசிக்கு நான்கு பிள்ளைகள். சஹீதா, சாதிக், முகமது ராஃபி மற்றும் சம்சீர். ஆயிஷா பீவியின் கணவர் சி ஒ மொய்து கேயி மற்றும் அவருடைய மகன்களில் ஒருவருமான ராஃபி இருவரும் முன்பே காலமாகி விட்டனர். அரக்கல் ராஜ்ஜியத்தின் 37 வது அரசியாகக் கருதப்படும் அரக்கல் பீவி 2006 ஆம் ஆண்டில் செப்டம்பர் 17 ல் அரக்கல் அரசியாகப் பதவியேற்றார். அவருக்கு முன்னதாக அரக்கல் அரசியாக இருந்தவர் சுல்தானா அயிஷா அலிராஜா. ஆயிஷா பீவியின் இறுதிச் சடங்குகள் தலசேரி ஒடதில் மசூதியில் முழு மாநில அரசு மரியாதையுடன் நடைபெறும் என அரண்மனை வட்டாரம் தெரிவித்திருக்கிறது. இவரது மரணத்தைத் தொடர்ந்து இவரையடுத்த தங்கையான அதிரஜா ஃபாத்திமா முத்து பீவி அடுத்த அரசியாக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

அரக்கல் அரச குடும்பம் கேரளாவில் உள்ள பாரம்பரியம் மிக்க இஸ்லாமிய அரச குடும்பங்களில் தாய்வழிச் சொத்துரிமையைப் பின்பற்றும் அரச குடும்பங்களில் முதன்மையானது. இக்குடும்பங்களில் வயதில் மூத்த நபரே அரசியாகக் கருதப்படுவார். கேரளாவின் கண்ணூர் நகரமும், லட்சத்தீவின் தெற்குப் பகுதியும் இவர்களது அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை. அரக்கல் நகர், மலபார் கடற்கரைப் பகுதியின் தலைநகராக இருந்தது. இவர்களில் பட்டத்திற்கு வரும் அரசர் அலிராஜா எனவும் அரசி அரக்கல் பீவி எனவும் அழைக்கப்படுவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com