ஹைதராபாத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ ஃப்ளைட் 6E 462 க்கு அன்று நேரம் சரியில்லை. ஏனெனில் அதனுள் பிரயாணித்துக் கொண்டிருந்த இர்ஷாத் அலி எனும் 20 வயது இளைஞர் விமானம் பறந்து கொண்டிருக்கையில் நடுவில் கதவைத் திறந்து கொண்டு இறங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் விமானத்திலிருந்து பிற பயணிகளிடையே அதிர்ச்சி பரவியதோடு இர்ஷாத் அலியைச் சமாதானப்படுத்தி நடுவானில் தரையில் குதிக்கும் முயற்சியைக் கைவிட வைப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது என்கிறார்கள். இண்டிகோ விமானம் தரையிறங்க வேண்டியது கெளஹாத்தி விமான நிலையத்தில். ஆனால், வேறு வழியின்றி வலுக்கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதோ புவனேஸ்வர் விமான நிலையத்தில். காரணம் அதனுள் பயணித்த இர்ஷாத் அலிக்கு ஏற்பட்ட மனநலக் கோளாறு.
ஹைதராபாத்தில் அதிகாலை 4.50 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது முதலே இர்ஷாத் அலியால் பிரச்னை தொடங்கி விட்டிருக்கிறது என்கிறார்கள் பிஜூ பட்நாயஜ் விமான நிலைய அதிகாரிகள்.
இர்ஷாத் அலி, அமைதியிழந்த மனதுடன் விமானம் பறந்துகொண்டிருக்கையில் நடுவானில் கதவைத் திறந்து கொண்டு வெளியில் குதிக்க முயன்றிருக்கிறார். பிற பயணிகளின் உதவியோடு அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும், போதுமென்றாகி விட்டது. கடைசியில் ஒருவழியாக அப்துல் கரீம் எனும் சக பயணியின் உதவியால் இர்ஷாத அலியைக் கட்டுப்படுத்தி காலை 6.10 மணியளவில் புவனேஸ்வர் விமானநிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கி இர்ஷாத் அலியை அங்குள்ள காவல்நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம் என்கிறார் விமான நிலைய இயக்குனரான SC ஹோட்டா.
இர்ஷாத் அலி, தனது தாயார் இறந்து விட்டதால் கெளஹாத்திக்கு பயணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அங்கே அவருக்குச் சொந்தமாக ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள்.
காவல்துறை நடைமுறைகள் முடிவுற்றதும் இர்ஷாத் அலியை புவனேஸ்வரில் இருக்கும் கேபிடல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனநலப் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறார்களாம்.
இப்படியாக பயணிகளில் ஒருவருக்கு ஏற்பட்ட மனநலப் பாதிப்பினால் கெளஹாத்தியை விமானம் சென்றைடைய தாமதம் ஏற்பட்டு சுமார் 7.13 மணீயளவில் கெளஹாத்தி சென்றடைந்தது.
Related Article
மெகாத்தொடர் அடிக்ட் பெண்களுக்கு, அண்ணன் சீமானின் உருக்கமான அட்வைஸ்!
சட்டுன்னு முதுகுவலி தீர இந்தாங்க பிடிங்க 5 ஈஸி யோகாசனாஸ்!
தங்க பிஸினஸில் ‘தொழில் ரகசியம்’ என்றால் என்ன? கேள்விக்கு வாசகர் பதில்!
மெளனி ராய் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் மயூராசனா யோகா விடியோ!
அடேயப்பா! திமிங்கலச் சாணி இவ்ளோ காஸ்ட்லியா? விற்பனை செய்ய முயன்ற மும்பை நபர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, பாளை. தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் நாளை மனுதாக்கல்
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


