திடீர் உடல் பருமன்/எடை இழப்பினால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

திடீர் உடல் பருமன் அல்லது எடை இழப்பினால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? என்பது குறித்து பதில் அளிக்கிறார் டிரைலைஃப் மருத்துவமனையின் டாக்டர் என்.ஜி. காஞ்சன்...
obesity
கோப்புப்படம்IANS
Published on
Updated on
2 min read

ரிஷிதா கண்ணா

வேகமான எடை இழப்பு நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்!

உடல் பருமன் என்பது உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் பிரச்னையாக இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பினால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் என பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலான நோய்களுக்கு உடல் பருமன் முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தைகள்கூட தற்போது உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தற்கால உணவு முறை, வாழ்க்கைச் சூழல், மரபியல் காரணிகள் என இதற்கான காரணங்கள் பல. வேகமான எடை அதிகரிப்பு உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்றும் இதனால் நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பல கோளாறுகளின் தொடக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் டிரைலைஃப் மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் என்.ஜி. காஞ்சன் கூறுகிறார்.

அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...

வேகமான எடை அதிகரிப்பு அல்லது இழப்பின்போது உடனடியாக ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் என்ன?

உடல் எடை வேகமாகக் குறையும்போது தலைவலி, எரிச்சல், சோர்வு, தலைச்சுற்றல், மலச்சிக்கல், முடி உதிர்தல், தசை இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களுக்கு தொற்று ஏற்படலாம்.

பெண்கள் வேகமாக எடை குறையும்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்கும்.

obesity
புற்றுநோய் வராமல் தடுக்க... இந்த 6 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

உடல் எடை, வளர்சிதை மாற்றத்தையும் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் எவ்வாறு பாதிக்கிறது?

வேகமான உடல் எடை அதிகரிப்பினால் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பல உடல் நலக் கோளாறுகளின் ஆரம்ப நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.

பக்கவாதம், இதய பிரச்னைகளின் தொடக்க நிலைக்கும் வழிவகுக்கும். மேலும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம்.

ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. பதற்றம், மனச்சோர்வு, தூக்கமின்மையும் உடல் பருமனால் ஏற்படுபவை.

அடிக்கடி உடல் எடை மாறும்போது உடல் நலத்தில் பிரச்னை அல்லது சிக்கல்கள் ஏற்படுமா?

உடல் எடை வேகமாக அதிகரிக்கும்போதும் சரி, குறையும்போதும் சரி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், நரம்பியல் கோளாறுகள் போன்ற பல நீண்ட கால பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

ஹார்மோன் சமநிலையின்மை, மேலும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

obesity
இந்த 7 உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது!

இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

வேகமான எடை மாற்றம், படபடப்பு, மாரடைப்பு, இதயத்தில் ரத்த ஓட்டம் குறைவது(இஸ்கெமியா) அல்லது ரத்த ஓட்டம் இல்லாதது, இதயத்துடிப்பின் விகித மாற்றம், வால்வுகளில் பிரச்னை போன்றவை ஏற்படலாம்.

வேகமான எடை மாற்றங்களினால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன?

ஊட்டச்சத்து நிபுணரை தொடர்புகொண்டு உடல் எடை அதிகரிப்பு அல்லது இழப்புக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கான டயட் முறையை பரிந்துரைக்கக் கூறுங்கள்.

உடலின் தேவைக்கேற்ப கலோரிகள் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப ஊட்டச்சத்து தேவைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

இணையங்களில் சமூக வலைத்தளங்களில் பார்த்து டயட் முறைகளை முயற்சிப்பதைவிட மருத்துவரிடம் சென்று பரிசோதித்து உங்கள் உடலுக்கு ஏற்றவாறு டயட் முறையை பின்பற்றினால் உடல்நலம் பாதிக்கப்படாது. விரைவாகவும் உடல் எடையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.

உடல் எடையைக் குறைக்கும் அல்லது அதிகரிக்கும் மருந்து, மாத்திரைகள், பானங்களைத் தவிர்க்க வேண்டும். அதுபோல, ஸ்டீராய்டுகள்(steroids), போடோக்ஸ்(botox) போன்ற ரசாயனங்களும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஏனெனில் அவை பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. நோயாளியின் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, உடல் எடையில் மாற்றம் வேண்டுமெனில் மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.

தமிழில்: எம். முத்துமாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com