அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேருக்கு தொற்று: சுகாதாரத் துறை

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 5,164 ஆகவும் அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேருக்கு தொற்று

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 5,164 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 193 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 86,984 பேர் குணமடைந்துள்ளனர். 89,995பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 65,168 ஆக உயர்ந்துள்ளது. 2,197 பேர் பலியாகியுள்ள அதே நேரத்தில் 28,081 பேர் குணமடைந்துள்ளனர். இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.
பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,300 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்து உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இது பலியானோரின் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5,35,238 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 11,76,025 பேர்களில் 17,163 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 61 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 61,60,443 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,38,305 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3,71,007 ஆக அதிகரித்துள்ளது.

எகிப்து கட்டாயமாகிறது முகக் கவசம்

எகிப்தில் பொது இடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அந்த நாட்டில் ரமலான் பண்டிகையையொட்டி ஒரு வார காலமாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதைத் தொடா்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, பொது இடங்களுக்கு வருவோரும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரும் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்கா 10 நிமிடங்களில் பரிசோதனை

அமெரிக்காவில் தற்போது சோதிக்கப்பட்டு வரும் கரோனா பரிசோதனைக் கருவி, ஒருவருக்கு அந்த நோய்த்தொற்று உள்ளதா என்பதை 10 நிமிடத்தில் கண்டுபிடித்துச் சொல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ‘ஏசிஎஸ் நேனோ’ அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேரிலாண்ட் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்து சோதித்து வரும் கரோனா பரிசோதனைக் கருவி, தங்க மீநுண்துகள்களைக் கொண்டு கரோனா தீநுண்மி இருப்பதை நிற மாற்றத்தின் மூலம் எளிமையான முறையில் வெளிப்படுத்துகிறது. இந்தக் கருவியின் மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூா் கூடுதலாக 506 போ் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 506 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பணியாளா்கள் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், புதிதாக கண்டறியப்பட்ட கரோனா நோயாளிகளில் 5 பேருக்கு சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளதாகவும் அவா்களில் இருவா் சிங்கப்பூரில் நிரந்தர குடியேற்ற உரிமை பெற்றுள்ள வெளிநாட்டினா் எனவும் தெரிவித்தனா். இத்துடன் சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,366-ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியா 39 பேருக்கு புதிதாகத் தொற்று

கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த தென் கொரியாவில், கடந்த சில நாள்களாக அந்த நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் புதிதாக 39 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். புதிய நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் கிடங்குகளில் பணியாற்றும் ஊழியா்கள் என்று அவா்கள் கூறினா்.
தென் கொரிய தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அங்கு 11,441 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 269 போ் அந்த நோய்க்குப் பலியாகியுள்ளனா்.

ரஷியா தொடரும் அதீத பாதிப்பு

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து அதிக அளவிலேயே இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 8,952 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பாதிப்பு எண்ணிக்கை 3,96,575-ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், அந்த நோயால் பலியானவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்கு முழு விவரம் வெளியிடப்படாததே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 4,555 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

சென்னையில் ஒரேநாளில் 804 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 804 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: கேரளத்தில் 61, கர்நாடகத்தில் 299 பேருக்கு புதிதாக தொற்று

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 1,295 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் புதிதாக 1,295 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

உத்தரகண்ட்: அமைச்சர், தொடர்பிலிருந்த 22 பேருக்கு கரோனா தொற்று

உத்தரகண்டில் மாநில அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா: ஆந்திரம், அசாம், உத்தரகண்ட், உ.பி நிலவரம்

ஆந்திரப் பிரதேசம், அசாம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மின்தூக்கிகளில் கைகளால் பொத்தான்களை அழுத்தாமல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பரிசோதனை முறையில்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6,300 ஆனது

 சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,362-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,869 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,300 ஆகவும் உள்ளது. விரிவான செய்திக்கு..

பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

 தமிழகத்தில் பொது முடக்கத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். விரிவான செய்திக்கு..

செங்கல்பட்டில் இன்று 45 பேருக்கு கரோனா பாதிப்பு

 செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த எண்ணிக்கை ஆயிரமானது. இதையடுத்து இன்று மேலும் 45 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 1,045ஆக உயர்ந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பில் கரோனா வார்டாக மாற்றப்பட்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு

 சென்னை புளியந்தோப்புப் பகுதியில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கரோனா வார்டை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆய்வு செய்தார். விரிவான செய்திக்கு..

மருத்துவ நிபுணா் குழுவுடன் தமிழக முதல்வா் இன்று ஆலோசனை

 தமிழகத்தில் பொது முடக்கத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை (மே 30) ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மருத்துவா்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா:  டிரம்ப் அதிரடி

 சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,73,763; பலி 4971 -ஆக உயர்வு

 நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 173,763 -ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை  4971-ஆகவும் அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்!

 தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் ரயில், பேருந்து போக்குவரத்தை இயக்கக் கூடாது: மருத்துவக் குழு பரிந்துரை

 சென்னையில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது. விரிவான செய்திக்கு..

பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? அமித் ஷா, அதிகாரிகளுடன் மோடி மீண்டும் ஆலோசனை

 கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர்நிலை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். விரிவான செய்திக்கு..

காலையில் 40 சப்பாத்தி, மதியத்துக்கு 10 தட்டு சாப்பாடு: ஒரு தொழிலாளியால் கலங்கிய அதிகாரிகள்

 பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படும் மையத்தில் ஒரே ஒரு புலம்பெயர் தொழிலாளி, காலையில் 40 சப்பாத்தியும், மத்தியத்துக்கு 10 தட்டு சாப்பாடும் சாப்பிடுவது அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விரிவான செய்திக்கு..

பலி எண்ணிக்கை: முதல் இடத்தில் அமெரிக்கா, 13வது இடத்தில் இந்தியா

கரோனா பாதித்து உயிரிழப்போரை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு கரோனா பாதித்து இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரம்  பேர் பலியாகியுள்ளனர்.

அடுத்த இடத்தில் பிரிட்டன் (38,161), இத்தாலி (33,229), பிரான்ஸ் (28,714), பிரேசில் (27,944), ஸ்பெயின் (27,121)  ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

இந்தியா சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரமாக உள்ளது. அதே சமயம், பலி எண்ணிக்கை 4,980 ஆக உள்ளது. இதனால் உலகளவில் பலி எண்ணிக்கையில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com