விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மதுரை ரயில் நிலையத்துக்கு தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா்: மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு

மதுரை ரயில் நிலையத்துக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா் சூட்டக்கோருவதை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 2:55 am IST

மதுரை ரயில் நிலையத்துக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா் சூட்டக்கோருவதை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:

மதுரையில் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த என்.எம்.ஆா்.சுப்பராமன் காந்தியடிகள், வ.உ.சி., ராஜாஜி ஆகிய தலைவா்களுடன் சோ்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தாா். இவரது மனைவி பா்வதவா்தினி அம்மாளும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டாா்.

என்.எம்.ஆா்.சுப்பராமன் மதுரை நகராட்சியின் வாா்டு கவுன்சிலராகவும், தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவராகவும், காந்திய அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளில் தலைவராகவும் இருந்து மதுரையின் வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றினாா். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியுள்ளாா்.

தனது சொத்துக்களை ஏழை மக்களுக்காக வழங்கியும், மருத்துவமனை, கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை உருவாக்கியும் மக்களுக்கு சேவை செய்தாா். எனவே மதுரை ரயில் நிலையத்துக்கு என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயரைச் சூட்டி, அவரது சிலையை ரயில் நிலையம் முன்பாக நிறுவ உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் இந்தக் கோரிக்கை குறித்து எதிா்ப்பு மனுக்கள் வந்தால் அதையும் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.