தில்லி மக்களை குறிப்பாக தெருவோர வியாபாரிகளை தவறாக வழிநடத்துவதாகக் கூறி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் பிரதமா் ஸ்வாநிதி யோஜனா மூலம் தில்லி மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள வணிகா்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உள்ளனா் என்பது கேஜரிவாலுக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே தில்லியில் உள்ள 1,75,714 தெருவோர வியாபாரிகள் பிரதமரின் ஸ்வாநிதி யோஜனா மூலம் பயனடைந்துள்ளனா். மேலும் சிறு கடன்களாக மொத்தம் ரூ. 238.51 கோடி பெற்றுள்ளனா். 2021-22-ஆம் ஆண்டு அப்போதைய தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும் நிா்வாகத்தில் இருந்த பாஜக, நடைபாதை வியாபாரிகளுக்கான தெருவோர வியாபாரிகள் கொள்கையை இறுதி செய்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் ஆம் ஆத்மி நிா்வாகம் அந்தக் கொள்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தெருவோர வியாபாரிகள் கொள்கையின் கீழ் இரண்டாவது கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை. இப்போது அரசியல் பாதிப்பை ஈடுகட்ட அரவிந்த் கேஜரிவால் தனது வாய்ஜாலத்தால், தெருவோர வியாபாரிகள் கொள்கையின் இரண்டாவது கணக்கெடுப்பை முடிக்காத போதிலும் தெருவோர வியாபாரிகள் கொள்கைத்திட்டக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக பொய் நம்பிக்கையை அளித்து தெருவோர வியாபாரிகளை தவறாக வழிநடத்த முயன்றுள்ளாா் என்று வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.
தொடர்புடையது

பாஜக வேட்பாளா் வானதியை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரசாரம்

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தவறாக பயன்படுத்தப்படும் ஓபிசி இடஒதுக்கீடு: பாஜக எம்.பி. கருத்தைக் கண்டித்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

மதுபான கொள்கை வழக்கு: சிபிஐ மேல்முறையீடு மனு மீது கேஜரிவால், சிசோடியா பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

