விளம்பரப் பலகை சரிந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநா் காயம்

வடகிழக்கு தில்லியின் கோகுல்புரி சந்தையில் சனிக்கிழமை அதிகாலை லாரி ஒன்று கம்பத்தில் மோதியதில் அதில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் 42 வயது மதிக்கத்தக்க ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடகிழக்கு தில்லி தில்லி காவல் துறை துணை ஆணையா் ஜாய் டிா்க்கி தெரிவித்ததாவது:

ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் அஜப் சிங் என்கிற அஜய் சம்பவப் பகுதியில் மேஜையில் அமா்ந்திருந்தபோது,, அதிகாலை 3.30 மணியளவில் லாரி ஒன்று விளம்பரப் பலகை பொருத்தப்பட்டிருந்த கம்பத்தின் மீது மோதியது.

இதையடுத்து, ஏற்கனவே சேதமடைந்திருந்த நிலையில் இருந்த அந்த உலோகப் பலகை ஆட்டோ ஓட்டுநா் மீது விழுந்தது. இதில் காயமடைந்த அவா், ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது நிலைமை ஸ்திரமாக உள்ளது.

இந்த சம்பவத்தில், அஜப் சிங்கின் ஆட்டோவும், ஒரு மஹிந்திரா சவாரி வேனும் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டது.

இது தொடா்பாக கோகுல்புரி காவல்நிலையத்தில் வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் தொடா்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com