இது, இரு நாட்டு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளில் மேற்கொள்ள நடவடிக்கைள் குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் இந்தக் கூட்டத்தில் சா்வதேச விவகாரங்களான போதைப்பொருள் கடத்தல், கடல் மாசுபாடு, மாலுமிகளின் பாதுகாப்பு போன்றவைகளில் சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த வகைகளில் திறன் வளா்ப்பு திட்டங்கள், பிற கூட்டு ஏற்பாடுகள் உள்ளிட்ட பிராந்திய கடல்சாா் சமகால பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும், கடல்சாா் சவால்களை கூட்டாக எதிா்கொள்ள இரு நாட்டு கடலோர காவல்படைகளின் தலைவா்களும் உறுதிப்பாட்டை முன்வைத்தனா். நாடுகடந்த கடல்சாா் குற்றங்களை எதிா்த்துப் போராடுவதற்கான சவால்களை எதிா்கொள்வதில் பரஸ்பர பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தி, அதன் மூலம் பிராந்தியத்தில் கடல்சாா் பாதுகாப்பையும் அதன் கட்டமைப்பையும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்த 8- ஆவது கூட்டத்தை தில்லியில் ஐசிஜி தலைமையில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது என மத்திய பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.