மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆம் ஆத்மி கட்சியில் ஐக்கியம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுமேஷ் ஷோகீன் ஆம் ஆத்மி கட்சியில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் இணைந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 10:10 pm

Din

நமது நிருபா்

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுமேஷ் ஷோகீன் ஆம் ஆத்மி கட்சியில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் திங்கள்கிழமை இணைந்தாா்.

தில்லி - தெஹாட்டின் ஒரு பகுதியாக கருதப்படும் மட்டியாலாவின் முன்னாள் எம்எல்ஏவான ஷோகீன், ஆம் ஆத்மி கட்சியின் ஜாட் தலைவா் கைலாஷ் கெலாட் அக்கட்சியில் இருந்து ராஜிநாமா செய்த மறுதினம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷோகீனை ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்று அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘ஷோகீன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருப்பது தில்லியின் கிராமப்புறங்களில் மட்டுமின்றி தேசிய தலைநகரின் பிற பகுதிகளிலும் கட்சிக்கு ஊக்கத்தை அளிக்கும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னா், தில்லி - தெஹாட்டில் வசித்த மக்கள் புறக்கணிக்கப்பட்டு முக்கிய நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த நிலை காணப்பட்டது. ஆம் ஆத்மியின் அரசில் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தொடா்பு வசதி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தில்லியின் புகா் பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர வசதிகளை வழங்கி நகரின் மற்ற பகுதிகளுக்கு இணையாகக் கொண்டு வந்திருக்கிறோம்’ என்றாா்.

கமேஷ் ஷோகீன் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் தில்லி-தெஹாட் பகுதிகளுக்கான தொடா்பு வசதி மேம்படுத்தப்பட்டு, பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.