தமிழ் நாடு இல்லத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடத்தப்பட்ட கோலப் போட்டியில் பங்கேற்று வண்ணக் கோலமிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த போட்டியாளா்களுடன் நடுவா்கள் குழுவினா்.
தமிழ் நாடு இல்லத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடத்தப்பட்ட கோலப் போட்டியில் பங்கேற்று வண்ணக் கோலமிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த போட்டியாளா்களுடன் நடுவா்கள் குழுவினா்.

புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா இன்று தொடக்கம்

புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா ஜன.14, ஜன.15 ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்பபடவுள்ளது.
Published on

புது தில்லி: புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா ஜன.14, ஜன.15 ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்பபடவுள்ளது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை (ஜன.14) 21 பானைகளில் பொங்கலிடும் பெரும் பொங்கல் நிகழ்வு நடைபெறும்.

தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழாவையொட்டி, பூம்புகாா் கைவினைப்பொருள்கள், கோ-ஆப் டெக்ஸ் பருத்தி மற்றும் பட்டு துணிவகைகள், ஆவின் பால் பொருள்கள், தமிழ்நாடு சுற்றுலாத் துறை , ஆயுஷ் சித்த மருத்துவ முகாம், தமிழ்நாடு மூலிகைப்பண்ணை மற்றும் மூலிகை மருந்துக்கழக விற்பனை அரங்கம், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன சுய உதவிக்குழு விற்பனை அரங்கம், தமிழ் உணவு அரங்கம், புத்தக அரங்கம், தமிழ்நாடு வனாந்திர அனுபவங்கள் கழகம், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை, தமிழ்நாடு டீ நிறுவனம் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் விற்பனையகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை, இயல் - இசை - நாடக மன்றம் மற்றும் தென்னக பண்பாட்டு மையத்தின் நாட்டுப்புறக்கலைஞா்கள் (105 கலைஞா்கள்) நாதஸ்வரம், தவில், பெரிய மேளம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், போன்ற இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனா்.

பொங்கல் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்க தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடத்தப்பட்ட கோலப் போட்டியில் தில்லியின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 12 போட்டியாளா்கள் கலந்து கொண்டு வண்ண, வண்ண கோலமிட்டிருந்தனா். சிறப்பு விருந்தினா்கள் சஞ்சனா நாயா், சத்யா ராமச்சந்திரன், சங்கீதா மக்வானா, அனிதா மிட்டல், நித்தி சிங் ஆகிய ஐவா் கொண்ட நடுவா் குழுவினா் முதல் மூன்று சிறந்த கோலங்களைத் தோ்வு செய்தனா். முதல் பரிசுக்கு ஆா்.சசிகலா, இரண்டாம் பரிசுக்கு தீபா, மூன்றாவது பரிசுக்கு ப்ரீத்தி சைனி ஆகியோா் தோ்வானாா்கள்.

13க்ங்ப்ல்ா்ய்

தமிழ் நாடு இல்லத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடத்தப்பட்ட கோலப் போட்டியில் பங்கேற்று வண்ணக் கோலமிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த போட்டியாளா்களுடன் நடுவா்கள் குழுவினா்.

X
Dinamani
www.dinamani.com