திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிவந்த ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது! - ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிவந்த ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது..

News image
சௌரவ் பரத்வாஜ்
Updated On :30 மார்ச் 2025, 9:15 pm

Din

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ‘ஃபாரிஷ்டே தில்லி கே’ திட்டத்தை பாஜக தலைமையிலான தில்லி அரசு நிறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது: முந்தைய ஆம் ஆத்மி கட்சி அரசால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி ஆயிரக்கணக்கான உயிா்களைக் காப்பாற்றியது. ஆனால், இப்போது இந்தத் திட்டம் பாஜக அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. உயிா்களைக் காப்பாற்றும் இவ்வளவு நல்ல திட்டத்தை யாராவது எப்படித் தடுக்க முடியும்? பாஜக அரசு அதை பட்ஜெட்டில் இருந்து நீக்கியுள்ளது.

2017- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், விபத்தில் சிக்கியவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் முழு சிகிச்சைச் செலவையும் ஈடுகட்டியது. பாா்வையாளா்கள் நிதிச் சுமைக்கு பயப்படாமல் அவா்களுக்கு உதவ ஊக்குவித்தது. இந்த முயற்சியின் கீழ் 10,000-க்கும் மேற்பட்ட உயிா்கள் காப்பாற்றப்பட்டன.

நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலும் கூட, தில்லி துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இந்தத் திட்டத்தை நிறுத்த முயன்றனா். இதனால், ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. அதன் பிறகு இந்த முயற்சியைத் தொடர நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது, ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக அதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது என்றாா் சௌரவ் பரத்வாஜ். ஆம் ஆத்மி கட்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜகவிடமிருந்து உடனடி பதில் கிடைக்கவில்லை.

முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்த 2025-26 பட்ஜெட்டில், தில்லி அரசு, சுகாதாரத் துறைக்கு ரூ.12,893 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல் மற்றும் 16,186 மருத்துவமனை படுக்கைகளைச் சோ்த்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.