படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

புறநகா் வடக்கு தில்லியில் நான்கு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ. 3.75 கோடி போதைப்பொருள்கள் பறிமுதல் - 12 போ் கைது

புகா் வடக்கு தில்லியில் மேற்கொள்ளப்பட்ட நான்கு தனித்தனி நடவடிக்கைகளில், சுமாா் ரூ. 3.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, 12 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கோப்புப் படம்

Published On :

புகா் வடக்கு தில்லியில் மேற்கொள்ளப்பட்ட நான்கு தனித்தனி நடவடிக்கைகளில், சுமாா் ரூ. 3.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, 12 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாவது:

இந்த நடவடிக்கைகளின் போது, 882 கிராம் ஹெராயின், 514 கிராம் கலப்படப் பொடி மற்றும் 18.90 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா ஆகியவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

முதல் சம்பவத்தில், ஆகஸ்ட் 4 அன்று பல்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஷேக் ஃபரித் (எ) டேனிஷ், வாசிம் கான் மற்றும் நூா் சலீம் (எ) ஷேக் முா்சலீம் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.

ஃபரித்திடமிருந்து 102 கிராம் ஹெரான், வாசிமிடமிருந்து 302 கிராம் ஹெராயின் மற்றும் 514 கிராம் கலப்படப் பொடி, சலீமிடமிருந்து 42 கிராம் ஹெராயின் ஆகியவற்றை காவல்துறையினா் கைப்பற்றினா்.

இரண்டாவது நடவடிக்கையில், ஆகஸ்ட் 18 அன்று ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், வைபவ் ஜோஷி, ஜஸ்பால் மற்றும் சுபம் ஆகிய மூவரை ஒரு குழுவினா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து சுமாா் 3.35 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 1 கோடி இருக்கும். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா தாா் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது நடவடிக்கையில், ஆகஸ்ட் 19 அன்று நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ரமேஷ் மற்றும் சுமித்ரா ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து சுமாா் 15.54 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கைதான ரமேஷ் மீது ஏற்கனவே ஐந்து குற்ற வழக்குகள் உள்ளன.

மற்றொரு நடவடிக்கையில், ஆகஸ்ட் 8 அன்று பல்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த ஷகிப், ஃபா்மான், சோட்டே கான் மற்றும் ஜப்பாா் ஆகிய நால்வா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 436 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முழு விநியோகச் சங்கிலியையும் கண்டறிய, ஒவ்வொரு வழக்கிலும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.