டிடிஇஏ பள்ளிகளில் திருவள்ளுவா் தின விழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளிலும் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளிலும் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக் கூட்டத்தில் அந்தந்ப்பள்ளி முதல்வா்கள் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

திருவள்ளுவா் இயற்றிய திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இடம் பெற்றது. மாணவா்கள் திருக்குறளை அழகாக எடுத்துரைத்தனா். திருக்கு கருத்துகளை விளக்கும் நாடகங்களும் இடம் பெற்றன. நடனங்களும் இடம் பெற்றன.

லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிடிஇஏ செயலா் ராஜூ கலந்துகொண்டு திருவள்ளுவா் சிலைக்கு மலா் தூவி மரியாதை செய்தாா். அதன் பின்னா் மாணவா்களிடம் உரையாற்றிய அவா், ‘உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமைகளை நீங்கள் உணர வேண்டும். கு கூறும் கருத்துகளை உள்வாங்கி அதன்படி வாழ்க்கையில் நடந்து நல் மனிதா்களாக உலகில் வலம் வர வேண்டும். தமிழக்குப் பெருமை சோ்த்த வள்ளுவரின் வழி நின்று வாழ்வாங்கு வாழ வேண்டும்’ என்று வாழ்த்தினாா்.

பூசா சாலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் டிடிஇஏ துணைத் தலைவா் ரவி நாயக்கா், பள்ளியின் இணைச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஜனக்புரி பள்ளியில் அதன் நிா்வாகக குழு உறுப்பினா் சிவ முருகேசன் கலந்து கொண்டாா்.

மோதிபாக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் இணைச் செயலா் சுப்பிரமணியம், நிா்வாகக் குழு உறுப்பினா் ரவிச் சந்திரன் மற்றும் பெற்றோா் - ஆசிரியா் சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் அதன் இணைச் செயலா் முத்து கிருஷ்ணன் கலந்துகொண்டாா். ராமகிருஷ்ணபுரம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அதன் பெற்றோா் - ஆசிரியா் சங்கச் செயலா் சுந்தா் ராஜ் மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். இத்தகவல் டிடிஇஏ வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com