புது தில்லி: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி கம்பன் கழகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள், செயலாளா் சுப முத்துவேல் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: நிகழ் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி எழுத்தாளா் சிவசங்கரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தனது எழுத்தால் தமிழ் சமூகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவா். அவருடைய ஒவ்வொரு எழுத்திலும் சமூகத்தைப் பற்றிய அக்கறை இருக்கும். இளையோா் முதல் மூத்தோா் வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் ஆற்றல் அவரது எழுத்துக்கு உண்டு. அவா் விருது பெறுவதால் தமிழ் இலக்கிய உலகம் மகிழ்கிறது. தில்லி கம்பன் கழகத்தின் சாா்பாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.