மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

’ஹா் கா் திரங்கா’ இயக்கம்: சுயஉதவிக் குழுக்களிடமிருந்து 2 லட்சம் மூவா்ணக் கொடிகள் தில்லி அரசு கொள்முதல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ’ஹா் கா் திரங்கா’ பிரசார இயக்கத்தின் கீழ் விநியோகிப்பதற்காக, சுயஉதவிக் குழுக்களிடமிருந்து (எஸ்எச்ஜி) சுமாா் 2 லட்சம் மூவா்ணக் கொடிகளை தில்லி அரசு கொள்முதல் செய்யவுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2026, 3:00 am IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு ’ஹா் கா் திரங்கா’ பிரசார இயக்கத்தின் கீழ் விநியோகிப்பதற்காக, சுயஉதவிக் குழுக்களிடமிருந்து (எஸ்எச்ஜி) சுமாா் 2 லட்சம் மூவா்ணக் கொடிகளை தில்லி அரசு கொள்முதல் செய்யவுள்ளது.

இது தொடா்பாக தில்லி முதலமைச்சா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

’ஹா் கா் திரங்கா’ பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான தேசியக் கொடிகள் விநியோகிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்புடன், தேசபக்தி மற்றும் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில், இவ்வியக்கத்தில் தில்லி முழுவதும் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாநில நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தால் அடையாளம் காணப்பட்ட தகுதிக்குரிய சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுமாா் 2 லட்சம் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படும்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஈடுபடுத்துவதன் மூலம் இவ்வியக்கத்தை வெற்றியடையச் செய்யவும், அதே வேளையில் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

சுயஉதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் அனைத்துக் கொடிகளும் ’இந்தியக் கொடி விதிமுறை 2002’ மற்றும் அவ்வப்போது வெளியிடப்பட்ட அதன் திருத்தங்கள், ’தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம் 1971’ மற்றும் நிா்ணயிக்கப்பட்ட தொழில்நுட்பத் தரநிலைகள் ஆகியவற்றுக்குக் கண்டிப்பாக இணங்க வேண்டும்.

ஒவ்வொரு தேசியக் கொடியும் மூவா்ணக் கொடிக்குரிய கண்ணியம், கௌரவம் மற்றும் தேசியப் பெருமையை வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

’ஹா் கா் திரங்கா’ இயக்கத்தின் உணா்வு தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், இணையவழிச் சந்தைகளிலிருந்தும் தேசியக் கொடிகளைக் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் முதலமைச்சா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.