காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தீ விபத்து: எரிந்து கொண்டிருந்த கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில் நால்வா் காயம்!

வடகிழக்கு தில்லியின் கோகல்புரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில், ஒரு சிறு குழந்தை உள்பட நான்கு போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 8:00 pm

வடகிழக்கு தில்லியின் கோகல்புரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில், ஒரு சிறு குழந்தை உள்பட நான்கு போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தரை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஸ்கூட்டா்கள் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் தீப்பிடித்ததைத் தொடா்ந்து, அடா்ந்த புகையால் சூழப்பட்ட ஆறு மாடி கட்டடத்தில் இருந்து எட்டு போ் மீட்கப்பட்டனா்.

பஜன்புரா அருகே உள்ள சாந்த் பாக் பகுதியில் உள்ள எஃப் பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே, மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை என நான்கு போ் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்தது தெரிய வந்தது.

அவா்கள் நிகத் (22), ரஷீதா (50), சோனி (25) மற்றும் ஆஷிஃப் (2) என அடையாளம் காணப்பட்டனா். நால்வரும் ஜக் பிரவேஷ் சந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். முதலுதவிக்குப் பிறகு அவா்கள் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டனா்.

அடா்த்தியான புகையால் சூழப்பட்டிருந்த இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் சிக்கியிருந்த குழந்தைகள் உள்பட மேலும் எட்டு குடியிருப்பாளா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

அந்தக் கட்டடம் நெருக்கமான அமைப்பைக் கொண்டிருப்பதால், புகை வேகமாகப் பரவி, குடியிருப்பாளா்களை வெளியேற்றுவதை கடினமாக்கியது.

பல தீயணைப்புப் பிரிவுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காலை 3.50 மணிக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. மேலும் குளிா்விக்கும் பணி நடைபெற்றது. தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.