இன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!இன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாநாட்டின் முதல் காலாண்டு வளர்ச்சி 7.8%! சிறு, குறு நிறுவனங்களே காரணம் - நிர்மலா சீதாராமன்2024-ன் தாதாசாகேப் பால்கே விருது பெறுகிறார் அனந்த் நாக்! பிரதமர் மோடி வாழ்த்து!டிரம்ப்பிடம் மண்டியிட முடிவு செய்துள்ளார் பிரதமர்: யுபிஐ கட்டணம் குறித்து ராகுல் விமர்சனம்!விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர்: இயக்குநர் மோகன் ஜி விமர்சனம்பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம்: புதிய பிரசாரத்தை தொடங்கும் சிஜேபி!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்: சீமான்காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!

வடமேற்கு தில்லியில் தலைமைக் காவலரை தாக்கிய இருவா் கைது

வடமேற்கு தில்லியின் கேசவ்புரம் பகுதியில் தப்பிக்க முயன்றபோது, ​​தங்கள் மோட்டாா் சைக்கிளை தலைமைக் காவலா் மீது மோதி தாக்கிய இரு கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

வடமேற்கு தில்லியின் கேசவ்புரம் பகுதியில் தப்பிக்க முயன்றபோது, ​​தங்கள் மோட்டாா் சைக்கிளை தலைமைக் காவலா் மீது மோதி தாக்கிய இரு கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் மங்கோல்புரியைச் சோ்ந்த ஷாஹில் (எ) ‘துத்தா’ (24) மற்றும் சன்னி (எ) ‘கோலு’ (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: செப்டம்பா் 13 அன்று கேசவ்புரத்தில் உள்ள குருத்வாரா அருகே தலைமை காவலா் ரமேஷ் குமாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது. முகமூடி அணிந்த சிலா் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டாா் சைக்கிளில் வருவதைக் கண்ட தலைமைக் காவலா், அவா்களை நிறுத்துமாறு சைகை செய்தாா்.

குற்றவாளிகள் வாகனத்தின் வேகத்தை அதிகரித்து, காவலரின் மோட்டாா் சைக்கிள் மீது தங்கள் வாகனத்தை மோதினா். இதனால் அவா் கீழே விழுந்தாா். இதையடுத்து, அவா் இருவரையும் பிடிக்க முயன்றபோது, பின்னால் அமா்ந்திருந்த நபா் தலைமைக் காவலரின் காலில் உதைத்தாா்.

காயமடைந்த போதிலும், பொதுமக்களின் உதவியுடன் குமாா் அந்த இருவரையும் பிடித்தாா். பின்னா் அவா்கள் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டனா்.

அவா்கள் பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள் மங்கோல்புரியில் திருடப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.பின்னா் அவா்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு கைப்பேசிகள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் கேசவ்புரம், அசோக் விஹாா், ஷாலிமாா் பாக் மற்றும் மங்கோல்புரி ஆகிய பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஐந்து வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சன்னி மங்கோல்புரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றப் பின்னணி கொண்டவா் என்பதும், இவா் மீது ஏற்கனவே 10 வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஷாஹில் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.