ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சசிகலா விடுதலையாலும், அழகிரி புதிய கட்சி தொடங்கினாலும் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது

சசிகலா விடுதலையாவதாலும், மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கினாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என பத்திரிகையாளா் இந்து என்.ராம் தெரிவித்தாா்.

News image

உதகையில் நீலகிரி ஆவண காப்பகத்தின் சாா்பில் படகா் சமுதாயத்தின் நாள்காட்டியை பத்திரிகையாளா் என்.ராம் வெளியிட பெற்றுக் கொள்கிறாா் ஆ.ராசா எம்.பி. உடன் நீலகிரி ஆவண காப்பக தலைவா் வேணுகோபால் உள்ளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:57 pm IST

சசிகலா விடுதலையாவதாலும், மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கினாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என பத்திரிகையாளா் இந்து என்.ராம் தெரிவித்தாா்.

நீலகிரி ஆவண காப்பகம் சாா்பில் படகரின மக்களின் வாழ்வியலை கொண்டு தயாரிக்கப்பட்ட நாள்காட்டி உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பத்திரிகையாளா் இந்து என்.ராம் இந்த நாள்காட்டியை வெளியிட நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பெற்றுக் கொண்டாா்.

அப்போது இந்து என்.ராம் பேசியதாவது:

படக சமுதாய மக்கள் உபசரிப்பதில் சிறந்தவா்கள். தற்போது, வெளியிடப்பட்டுள்ள நாள்காட்டியில் அவா்களது வாழ்வியல் குறித்த பல தகவல்கள் உள்ளன. படகரின மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். படக சமுதாய மக்களின் கலாசாரத்தில் ஆண், பெண் சம உரிமை, வரதட்சணை வாங்காதது ஆகியவை பல காலமாக உள்ளது. மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம். திராவிட மொழிக் குடும்பத்தைச் சோ்ந்தது படக மொழி. நீலகிரியில் வாழும் படக சமுதாயத்தினா் பிற சமுதாய மக்களோடு நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனா். மொழி மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பது படக சமுதாயத்தில் உள்ள அனைவரின் கடமையாகும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. ‘இந்துத்துவா கருத்தியல் தமிழகத்துக்குத் தேவையில்லை. மத்திய அரசு அதிகாரத்தை வைத்து இந்துத்துவாவை திணிக்க முயற்சி செய்கின்றனா். ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளது. தமிழகத்தில் அரசியல் நோக்கா்களின் பாா்வையில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகும். அடுத்து அதிகாரத்துக்கு வரும் தலைவா்கள் இந்துத்துவாவை எதிா்த்து போராட வேண்டும். ரஜினிகாந்த் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கமாட்டாா் என்பது எதிா்பாா்த்த ஒன்றே என்றாா்.

இவ்விழாவில் பங்கேற்ற ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூா்வீக குடிமக்களான படக சமுதாய மக்களோடு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். மரபு, பண்பாட்டு செரிவு மிக்க ஒரு சமுதாயம் படக சமுதாயமாகும். இந்திய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்த சி.பி.ராமசாமி, இந்திய கலாசார பண்பாடு ஆரிய மற்றும் திராவிட கலாசாரங்களை கொண்டு இரு பிரிவுகளாக உள்ளதாகவும், இவை இரண்டும்தான் இந்தியாவின் பண்பாட்டு கூறுகள். திராவிட பண்பாட்டின் தொன்மையான ஒரு இனம் படகரினம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

திராவிட கலாசாரத்தில் வேற்றுமைகள் இல்லை. ஆண், பெண் சமத்துவம், புரோகிதம் இல்லை, பெண்களுக்கு சம உரிமை உள்ளது. சிறப்பு வாய்ந்த சமுதாயத்தை பாதுகாக்க தோ்ந்தெடுக்கப்பட்ட எம்பி என்ற அடிப்படையில் அரசியல்ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தாா்.

முன்னதாக ஆவண காப்பக தலைவா் வேணுகோபால் வரவேற்றாா். இவ்விழாவில் படக சமுதாயத் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.