
கற்றலைக் கணித்தல்
கற்றலைக் கணித்தல் - பி.இரத்தினசபாபதி, இரேணுபத்மா மோகன்; பக்.248; ரூ.150; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14; 044 - 2811 5618.

கற்றலைக் கணித்தல் - பி.இரத்தினசபாபதி, இரேணுபத்மா மோகன்; பக்.248; ரூ.150; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14; 044 - 2811 5618.
கல்வியியல் பட்டப் படிப்புக்கான பாட நூல் இது. மாணவர்கள் கற்றதை மதிப்பிடுவதற்கு உள்ள பல்வேறு வகையான அணுகுமுறைகள், செயல்முறைகளைப் பற்றி நூல் விளக்குகிறது. நடைமுறையில் தேர்வுகள் நடத்தப்படும்விதம், வகுப்பு டெஸ்ட்கள் நடத்தப்படுவதன் நோக்கம், மாணவர்களின் நுண்ணறிவைத் தெரிந்து கொள்வதற்கான நுண்ணறிவுச் சோதனைகள் பற்றி எல்லாம் சிறப்பாக விளக்கும் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் சில அணுகுமுறைகள் நம்மை வியக்க வைக்கின்றன.
"வகுப்பறையிலோ, பருவ நிறைவிலோ நடத்தப்படும் தேர்வு ஆண்டு இறுதித் தேர்வுக்கான ஒத்திகை மட்டுமன்று, அத்தேர்வின் வழி மாணவர்கள் தங்கள் கற்றல் குறைபாடுகளையும், இடர்ப்பாடுகளையும் ஆசிரியர் அறிவதற்கே அத்தேர்வுகள்' எனத் தேர்வுகள் பற்றியும்,
"மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சில பள்ளிகள் தண்டிக்கப்படுகின்றன. மாணவர்களின் எண்ணளவைகள் அவர்களை வழிகாட்டுவதற்காகவே இன்றி, தண்டிப்பதற்காக இல்லை என்பதை சிலர், குறிப்பாக சுயநிதிப் பள்ளி நிர்வாகத்தினர் உணர்வதில்லை' என மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பற்றியும்,
"ஆசிரியர் - மாணவர் ஊடாட்டம் இல்லா வகுப்பு கற்றல் நிகழும் இடமாகாது. தகவல் அறிவிப்புக் கூடமாகும்' என ஆசிரியர் - மாணவர் தொடர்பு பற்றியும் கூறும் கருத்துகள் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





