விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு கடிதம்!

பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை வைத்துள்ளது குறித்து...

வெள்ளத்திற்கு மத்தியில் டிராக்டர்கள் - பிடிஐ

Published On :7 செப்டம்பர் 2026, 9:39 pm IST

பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (செப். 7) தெரிவித்தார்.

நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். பிகாரின் கருவூலம் காலியாகிவிட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

ஓய்வூதியம் போன்ற வழக்கமான திட்டங்களுக்கான செலவுகளைச் செய்வதற்காகக் கூட, வெள்ளம் வருவதற்குச் சற்று முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதத்தில், பிகார் அரசு அவசரக்கால நிதியிலிருந்து ரூ. 4,000 கோடி எடுத்தது என்ற விஷயத்தை நான் தொடர்ந்து எழுப்பி வருகிறேன்.

அவசரக்கால நிதியிலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் பணத்திற்கான விலையை இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் துயரப்படுகிறார்கள்; அதனால்தான் நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

அந்தக் கடிதத்தில் நான் ஏழு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். பிகாரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும், மாநிலத்திற்கு ரூ. 5,000 கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதுமே எனது முதல் கோரிக்கை எனக் குறிப்பிட்டார்.

Summary

Bihar be declared a national disaster RJD leader Tejashwi Yadav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.