தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஜெயித்துக் கொண்டே இருப்பேன்

பல்வேறு சுவாரசியமான தகவல்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

News image
Updated On :29 ஏப்ரல் 2025, 2:03 pm

DIN

ஜெயித்துக் கொண்டே இருப்பேன் - தமிழில்: ரா.கி.ரங்கராஜன்; பக்.208; விலை ரூ.90; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; ✆ 044-2464 1314.

குத்துச்சண்டை ஜாம்பவான் முகம்மது அலி சொல்லச் சொல்ல அமெரிக்க கறுப்பின எழுத்தாளர் ரிச்சர்ட் டர்ஹம் எழுதிய முகம்மது அலியின் சுயசரிதை நூலான 'தி கிரேட்டஸ்ட்: மை ஓன் ஸ்டோரி' என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல்.

1973 -ஆம் ஆண்டு கென் நார்ட்டனுடனான குத்துச்சண்டை போட்டியில் முகம்மது அலி தோல்வி அடைந்த பிறகு அவர் மனதில் இருந்த எண்ணங்களைச் சொல்வதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. அவர் தோற்கடிக்கப்பட்ட பிறகு வெள்ளையர்கள் எப்படி மகிழ்ச்சியில் துள்ளினர் என்பது குறித்தும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. தொடக்க வாழ்க்கையில் வறுமையால் அவர் பட்ட இன்னல்களைக் கடந்து காஸ்சியஸ் மார்செல்லஸ் கிளே என்ற சிறுவன் எப்படி குத்துச்சண்டை ஜாம்பவான் முகம்மது அலியாக மாறினான் என்பது பல்வேறு சுவாரசியமான தகவல்களுடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா - வியட்நாம் இடையே போர் நடைபெற்று வந்த நேரத்தில் முகமது அலி அந்தப் போரில் பற்கேற்க மறுத்ததுடன், 'வியட்நாம் மக்களுடன் எனக்குச் சண்டை எதுவும் கிடையாது' என்று பத்திரிகைகளுக்கு அவர் பேட்டி அளித்தார்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு கறுப்பினத்தவராக அவர் சந்தித்த அவமானங்கள், அவருக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.