ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

அரளிப்பூ மனிதர்கள் (சிறுகதைகள்)

அரளிப்பூவைப் போலவே பல்வேறு விரும்பத்தகாத சூழல்களில் வாழும் கிராமப்புற மனிதர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்னைகளை கதைக் கருவாக கொண்டு மண்ணின் மனம் மாறாமல் எழுதப்பட்டுள்ள 16 சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த 'அரளிப்பூ மனிதர்கள்' நூல்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2026, 2:10 pm IST

அரளிப்பூ மனிதர்கள் (சிறுகதைகள்)- ந. அறிவரசன்; பக். 126; ரூ. 115; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 600 050. ✆ 044- 2625 1968.

பூக்களில் அரளிப்பூ சற்று வித்தியாசமானது. வெப்பம், வறட்சி, கடும் காற்று, மோசமான மண் போன்ற எதிர்மறை சூழல்களிலும் தளராது வளர்ந்து பல்வேறு கண்ணைக் கவரும் வண்ணங்களில் பூக்கும். விஷத்தன்மை கொண்டது. ஆனாலும் அரளிப்பூவை ஒதுக்காமல் தெய்வங்களுக்கு சூட்டி வழிபடுவர்.

மனித வாழ்வும் அதைப் போலத்தான். விரும்பத்தகாத பல்வேறு சூழல்கள் இருந்தாலும் அதிலும் போராடி வெற்றி பெறுவோர் உண்டு. ஆனாலும், சிலரின் அடிமனதில் உள்ள கெட்ட குணங்கள் வாழ்வியல் ஓட்டத்தில் அவர்களை அறியாமல்கூட வெளிப்படுவதுண்டு. எனினும், அவர்களில் சிலர் கொண்டாடப்பட வேண்டியவர்களாகவும் இருப்பவர்.

அரளிப்பூவைப் போலவே பல்வேறு விரும்பத்தகாத சூழல்களில் வாழும் கிராமப்புற மனிதர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்னைகளை கதைக் கருவாக கொண்டு மண்ணின் மனம் மாறாமல் எழுதப்பட்டுள்ள 16 சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த 'அரளிப்பூ மனிதர்கள்' நூல்.

எத்தனை வளர்ச்சி, நாகரிகம் ஏற்பட்டாலும் சில மனித குணநலன்களை யாராலும் மாற்ற முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றும் ஆங்காங்கே சில சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண் சிசுக் கொலை, திருமண பந்தத்தை மீறிய வெளி உறவு, திரைப்பட மோகம், மதுப் பழக்கம், தீண்டாமை என சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றை தான் உணர்ந்த வலியின் அடிப்படையில் கருவாக்கி கிராம மக்களின் பேச்சு மொழியில் கதைகளை எழுதி தொகுத்துள்ளார் நூலாசிரியர்.

தமிழாய்வில் ஆழங்காற்பட்ட நூலாசிரியர், தனது கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உரையாடலில் கிராம மக்களின் அன்றாட பேச்சில் சர்வசாதாரணமாக பேசும் சொற்கள்தான் என்றாலும் சிலவற்றை தவிர்த்திருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.