சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மாறும் காலங்கள் (சிறுகதைகள் தொகுப்பு)

இன்றைய இளம் தலைமுறையினர் படிப்பது மட்டுமன்றி, ஒவ்வொரு நூலகத்திலும் இடம்பெற வேண்டிய சிறுகதைகள் தொகுப்பு 'மாறும் காலங்கள்'.

Published On :10 ஆகஸ்ட் 2026, 7:00 pm IST

மாறும் காலங்கள் (சிறுகதைகள் தொகுப்பு)- ஜி. மீனாட்சி; பக். 162; ரூ. 180; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட், பெங்களூரு. ✆ 74185 55884.

முன்பெல்லாம் வரலாறுகளை அறிய உதவும் நாவல்களைத் தேடிப் படித்தனர். அவை அதிக பக்கங்களைக் கொண்டிருப்பதால், குறைந்த அளவு பக்கங்கள், கருத்துகள் சுருக்கமாக பதிவு கொண்ட நல்ல சிறுகதைத் தொகுப்புகளை மக்கள் அதிகம் வாசிக்கின்றனர். அப்படியான ஒரு நூல்தான் எழுத்தாளர் ஜி. மீனாட்சியின் 'மாறும் காலங்கள்' எனும் சிறுகதைகள் தொகுப்பு.

நூலாசிரியர் தனது அனுபவத்தை மட்டுமல்ல, அவர் பிறரிடமிருந்து கேட்டறிந்த, பார்த்த, உணர்ந்த அனுபவங்களை இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பதிவு செய்துள்ளார். உதாரணமாக, நூலின் தலைப்பு இடம் பெற்ற 'மாறும் காலங்கள்' சிறுகதையில் உறவுகளுக்காக ஏங்கியிருந்த வாழ்வு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில், உறவினர்கள் வருகையின் போது, விட்டுக் கொடுக்காத மனநிலையுடன் குழந்தைகள் வளர்வதையும் படம்பிடித்து காட்டியுள்ளார் எழுத்தாளர்.

'அம்மாவுக்கு ஒரு பரிசு', 'அன்பு சூழ் வாழ்வு' உள்ளிட்ட ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் மானுட வாழ்வியலில் நம்மிடம் பழக்கத்தில் இருந்த ஒரு வழக்கம் இன்று எவ்வாறு உள்ளது என்பதை அழகாக, நாம் நினைத்துப் பார்க்கும் வகையில் நூலில் தொகுத்து கூறப்பட்டுள்ளது.

நூலாசிரியர் இதழியலாளர் என்பதால், தனது நூலில் இடம்பெற்ற ஒவ்வொரு சிறுகதையிலும் அவரது வாழ்வியல் அனுபவங்களை நடைமுறை எதார்த்தத்துடன் பதிவு செய்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினர் படிப்பது மட்டுமன்றி, ஒவ்வொரு நூலகத்திலும் இடம்பெற வேண்டிய சிறுகதைகள் தொகுப்பு 'மாறும் காலங்கள்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.