திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டு

பாரதியும் கிறிஸ்தவமும்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஹிந்துமத தெய்வங்களை பலவாறு பாடியவர். சக்தி உபாசகராக பராசக்தியை பாடிய பாடல்களும், கண்ணன் பாட்டும், விநாயகர் நான்மணிமாலையும் அவரது பக்தியை பறைசாற்றுவன.

Updated On :

பாரதியும் கிறிஸ்தவமும்-ஜோரா, மோசசு மைக்கேல் பாரடே; பக். 116; ரூ.100; கிருபா பதிப்பகம், சென்னை-600 073. ✆ 90031 97577.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஹிந்துமத தெய்வங்களை பலவாறு பாடியவர். சக்தி உபாசகராக பராசக்தியை பாடிய பாடல்களும், கண்ணன் பாட்டும், விநாயகர் நான்மணிமாலையும் அவரது பக்தியை பறைசாற்றுவன.

ஒரு கட்டத்தில், சமய சடங்குகளைக் கடந்து, 'உள்ளும் புறமுமாய் உள்ளதெல்லாம் தானாகும் வெள்ளம் ஒன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே' என்று பரசிவ வெள்ளம் பாடியவர். கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன், முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்' ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர் உருவகத்தாலே உணர்ந்து உணராது பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே எனும் கொள்கை உடையவர் பாரதி.

தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர் மூடர் என்று சாடியவர். ஆயினும், அவர் இயேசுவையும் அல்லாவையும் புகழ்ந்து பாடத் தவறவில்லை. கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை புரிந்து பாடியவர். அதேவேளையில், வலிந்து மதமாற்றம் செய்யும் சம்பவங்களை கண்டிக்கவும் செய்தார்.

கிறிஸ்தவ பாதிரியார்களின் நற்செயல்களை பாராட்டியும், பாரத தேசத்தின் போக்குக்கு எதிராக செயல்படும்போது அவர்களை எதிர்த்தும் பாரதியார் எழுதிய கட்டுரைகளின் பாரபட்சம் இல்லாத, வெளிப்படையான கருத்தாடல்களை இந்த நுôல் பதிவு செய்துள்ளது.

புதுவையில் தனது நண்பர் சுரேந்திரநாத்ஆர்யர் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியதை அறிந்து வருந்தினாலும், ''நீ என்ன செய்வாய்? ஹிந்து சமூகம் இருக்கிற நிலைமை இதற்கு இடம் கொடுக்கிறது. உயிரற்ற ஜனச்சமூகம்'' என்று சாடுகிறார் பாரதியார்.

கிறிஸ்தவ பாதிரிகள் பள்ளிக்கூடங்கள் முதலியன வைப்பது போல நமது குருக்கள், மடாதிபதிகள் ஏன் செய்யவில்லை என்று ஹிந்து மத ஸ்தாபனங்களின் தலைமைகளைக் கேள்வி கேட்டு எழுதியதையும் இந்த நூல் பதிவு செய்துள்ளது.

பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே- பாடலும், ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்ற பாடல் வரிகளும் பாரதியார் எழுதுவதற்கு காரணம் அவர் கிறிஸ்தவ வேதாகமத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்று நூலாசிரியர் குறிப்பிடுவது புதிய சிந்தனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.