ஸ்பெயின் கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ஃபெராரி டிரைவர் ஃபெர்னாண்டோ அலோன்ஸா வெற்றி பெற்றுள்ளார்.
இந்த சீசனுக்கான பார்முலா 1 கார் பந்தயத்தின் 5-வது சுற்று ஸ்பெயின் கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
66 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியில் 5-வது வரிசையில் இருந்து புறப்பட்ட ஃபெராரி டிரைவர் அலோன்ஸா 1 மணி நேரம், 39 நிமிடங்கள், 16 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி கண்டார்.
இந்த சீசனில் அவர் பெற்றுள்ள 2-வது வெற்றி இது. முன்னதாக சீன கிராண்ட்ப்ரீ போட்டியில் அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஃபார்முலா 1 போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அலோன்ஸா, தனது கார் பந்தய வாழ்க்கையில் பெற்ற 32-வது வெற்றியாகும்.
லோட்டஸ் டிரைவர் கிமி ராய்க்கோனென் 2-வது இடத்தையும், ஃபெராரியின் மற்றொரு டிரைவரான ஃபிலிப் மாஸா 3-வது இடத்தையும், ரெட்புல் டிரைவர் செபாஸ்டியன் வெட்டல் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்திய அணியான ஃபோர்ஸ் இந்தியா அணியின் டிரைவர்களான பால் டி ரெஸ்டா 7-வது இடத்தையும், அட்ரியான் சுதில் 13-வது இடத்தையும் பிடித்தனர்.
5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் டிரைவர்கள் வரிசையில் வெட்டல் 89 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராய்க்கோனென் 85 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அலோன்ஸா 72 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



