நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி: கலசலிங்கம் மாணவர்கள் வெற்றி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கலசலிங்கம்


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
போட்டிகள் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கலசலிங்கம் பல்கலைக்கழகத்ததின் இ.இ.இ. 4-ம் ஆண்டு மாணவர் ஏ.எஸ்.ஆபினஷ்குமரன் 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார். இயந்திரவியல் துறையின் பி.ஆர்.பிரதீஷ் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். இந்த மாணவர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும் விருதுநகரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய முதலவர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பி.ஆர்.பிரதீஷ் முதலிடம் பெற்று, ரூ.1000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார்.
இவர்களை வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர், சிவில் துறை தலைவர் முத்துக்கண்ணன், உதவிப் பேராசிரியர் சசீந்திரன், உடற்கல்வி ஆசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...