கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒருநாள் போட்டி: ஷ்ரேயஸ் ஐயர் 1000 ரன்களை கடந்தார் 

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 25 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். 

News image
ஷ்ரேயஸ் ஐயர்
Updated On :23 ஜூலை 2022, 10:19 am

DIN

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர்  25 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். 

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய (ஜூலை 22) முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 308 ரன்களை அடித்து பிறகு 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் ஷ்ரேயஸ் ஐயர்  54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் இவர் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார். 

இதற்குமுன் 1000 ரன்களை 24 இன்னிங்ஸில் விராட் கோலி, ஷிகர் தவான் கடந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து நவஜோத் சிங் சித்து மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் 25 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்த இந்திய வீரர்களாக உள்ளனர்.

28 ஒருநாள் போட்டிகளில் 25 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 1001 ரன்களை எடுத்துள்ள ஷ்ரேயஸ் ஐயரின் சராசரி 41.70 ஆகும். இதில் 1 சதம், 10 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 103. 

இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.