காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா வெல்லும் : ரிக்கி பாண்டிங் 

இந்த வருட டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூலை 2022, 12:58 pm

DIN

இந்த வருட டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டனுமான ரிக்கி பாண்டிங் இந்த வருட டி20 உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 

கடைசி டி20 கோப்பையினை வென்ற ஆஸ்திரேலியாவிற்கு அதே நாட்டில் இம்முறை நடப்பதால் சாதகமான சூழ்நிலை நிலவும். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளம் பற்றி எனக்கு தெரியும். கடினமான அந்த ஆடுகளத்திலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடினர்.

தற்போது இங்கிலாந்து அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. எனக்கு தெரிந்து 3 அணிகளுக்கு பெரிய அளவிலான போட்டி இருக்கும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின் போட்டி கடுமையானதாக இருக்கும். ஏனெனின் அதிகமான ஆட்ட நாயகர்கள் இந்த அணிகளில்தான் இருக்கிறார்கள். 

நியூசிலாந்து, பாகிஸ்தான் அல்லது மே.இ.தீவுகள் அணிகள் கூட நன்றாக விளையாடுகின்றனர். அவர்களுக்கு டி20 சாதகமான களம். இருப்பினும் அவர்கள் ஆட்டத்தை எப்படி ஆடுவார்கள் என்பதைப் பொறுத்தே இந்த உலக கோப்பை முடிவுகள் இருக்கும்.

என்னைப் பொருத்தவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். அதில் ஆரோன் பின்ச் தலைமையிலான அணி ரோகித் சர்மா அணியினை வென்று கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.