சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

20 ஆண்டுகளாக யுனிசெஃபில் சச்சின் டெண்டுல்கர்

யுனிசெஃப் சர்வதேச அமைப்பின் நல்லெண்ண தூதராக, சமுதாயத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகளின் நலனுக்காக செயல்பட உள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:16 am

DIN

யுனிசெஃப் சர்வதேச அமைப்பின் நல்லெண்ண தூதராக, சமுதாயத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகளின் நலனுக்காக செயல்பட உள்ளார்.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, “ இத்தனை ஆண்டுகள் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. பல்வேறு அற்புதமான நினைவுகள். குழந்தைகளின் கனவு நினைவாக யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து செயலாற்றுவது மனதிற்கு திருப்தியளிக்கிறது. எங்களது அடுத்த நல்லதொரு கூடுகைக்காக இணையவுள்ளதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் பல்வேறு தருணங்களில் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

2003 - போலியோ தடுப்பு விழிப்புணர்வு பணிக்காக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2008 -  சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013 -  சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தெற்கு ஆசியாவிற்காக நியமிக்கப்பட்டார். 

2019 -  ’ பேட் ஃபார் பிரெயின் டெவலப்மண்ட்’ என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த 3 நாள் பயணமாக நேபாளத்திற்கு சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.