உலகக் கோப்பை: இந்தியா முதலில் பந்துவீச்சு! தமிழக வீரர்களுக்கு இடமில்லை!
இந்திய அணியில் ஷமி, ஜடேஜா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை...


12-வது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் செளதாம்ப்டனில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி. தொடக்க |ஆட்டத்தில் இங்கிலாந்திடம்104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்திடமும் 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இந்நிலையில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் இன்று மோதுகிறது தெ.ஆ. அணி.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்சிஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமி, ஜடேஜா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் கே.எல். ராகுல் 4-ம் நிலை வீரராகக் களமிறங்கவுள்ளார்கள்.
தென் ஆப்பிரிக்க அணியில், ஹாசிம் ஆம்லா மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஷம்சிக்கு தெ.ஆ. அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...