ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ராயுடுவின் 3டி கிண்டல்: விஜய் சங்கர் பதில்!

ட்விட்டரில் கருத்து தெரிவித்த அம்பதி ராயுடுவுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் விஜய் சங்கர்...

News image
Updated On :27 மே 2019, 8:57 am

எழில்

உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணியில் சேர்க்கப்படாததால் வேதனையுடன் ட்விட்டரில் கருத்து தெரிவித்த அம்பதி ராயுடுவுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் விஜய் சங்கர்.

ஆல் ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால், அம்பட்டி ராயுடுவால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறமுடியவில்லை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் (3 டைமன்ஷன் திறமை) ஆகிய மூன்றை அடிப்படையாக வைத்து விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்று தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் இதற்கு விளக்கமளித்தார்.

தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த அம்பட்டி ராயுடு, உலகக் கோப்பை போட்டியைக் காண 3டி கண்ணாடியை வாங்கவுள்ளேன் என்று வேடிக்கையாகவும், அதே நேரம் வேதனையுடன் ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார்.

ராயுடுவுக்கு இதுவரை பதிலளிக்காமல் இருந்த விஜய் சங்கர், தற்போது அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: ஒரு கிரிக்கெட் வீரர் அணியில் தேர்வாகாமல் போகாமால் போனால் அந்த வேதனை எப்படியிருக்கும் என்பதை நான் அறிவேன். வீரரின் பக்கமிருந்து அதை நான் புரிந்துகொள்வேன். அவர் என்னைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதை அறிவேன். பெரிதாகச் சொல்லவேண்டுமென்று அவர் அந்த ட்வீட்டை வெளியிடவில்லை. அவருடைய சூழலை நான் புரிந்துகொள்வேன். எந்த கிரிக்கெட் வீரருக்கும் இது சரிதான் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.