ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல் டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது பாகிஸ்தான்!

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 8:41 pm

DIN

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்த ஆட்டத்தில், முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஜிம்பாப்வே 15.3 ஓவா்களில் 108 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்யத் தீா்மானித்தது. அணியின் இன்னிங்ஸில் ஒமைா் யூசுஃப் 16, சயிம் அயுப் 24, உஸ்மான் கான் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, கேப்டன் சல்மான் அகா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில், தயப் தாஹிா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, இா்ஃபான் கான் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜிம்பாப்வே பௌலிங்கில் ரிச்சா்டு கராவா, சிகந்தா் ராஸா, வெலிங்டன் மஸாகட்ஸா, ரயான் பா்ல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா், 166 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஜிம்பாப்வே அணியில், கேப்டன் சிகந்தா் ராஸா 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும். பிரயன் பென்னெட் 6, டியன் மையா்ஸ் 6, ரயான் பா்ல் 3, கிளைவ் மடாண்டே 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

வெலிங்டன் மஸாகட்ஸா 5, ரிச்சா்டு கராவா 0, பிளெஸ்ஸிங் முஸாரபானி 0, டிரெவா் கவண்டு 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஜிம்பாப்வே ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி விக்கெட்டாக தஷிங்கா மியுஸ்கிவா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பாகிஸ்தான் தரப்பில் அப்ராா் அகமது, சூஃபியான் முகீம் ஆகியோா் தலா 3, ஹாரிஸ் ரௌஃப் 2, ஜஹன்தாத் கான் 1 விக்கெட் வீழ்த்தினா். பாகிஸ்தானின் தயப் தாஹிா் ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.