டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: முதல் இடத்தை பிடித்தார் ஹாரி புரூக்!

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஜோ ரூட் | ஹாரி ப்ரூக்
ஜோ ரூட் | ஹாரி ப்ரூக்
Published on
Updated on
1 min read

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டிலில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை விஞ்சி மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படியுங்கள் |பிரண்டன் கிங் அதிரடி: தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்!

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த 25 வயதான ஹாரி புரூக் முதல் இன்னிங்ஸில் தனது 8-வது சதமாக 123 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 55 ரன்களும் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பாகிஸ்தானில் நடந்த போட்டியில் முச்சதம் விளாசிய ஹாரி புரூக் அதன்பின்னர் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய ஜோ ரூட் ஒரு இடங்கள் சரிந்து 2-வது இடத்தைத் தக்கவைத்துள்ளார். அவர் 897 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள் |சதர்லேண்ட் சதம்: இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!

ஹாரி புரூக் முதல் முறையாக 898 புள்ளிகள் குவித்து அதிக புள்ளிகள் பெற்றவர்களில் 34-வது அதிகபட்சத்தை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஜோ ரூட் கடந்த ஜூலை மாதம் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனை முந்தி முதலிடத்தில் இருந்தார். அதன்பின்னர் தனது முதலிடத்தை இழந்துள்ளார் ஜோ ரூட்.

அதேபோல, பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் தொடர்கிறார். ஆல்-ரவுண்டர்களில் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தில் தொடர்கிறார்.

இதையும் படியுங்கள் |பர்மிங்காம் டெஸ்ட்: 200 நாள்களுக்கு முன் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!

முன்னதாக, வெல்லிங்டனில் நடந்த போட்டியில் ஜோ ரூட் பேசுகையில், “ இந்த நிமிடத்தில் என்னிடம் கேட்டால், சிறந்த வீரர் ஹாரி புரூக் என்று கூறுவேன்” என்றார்.

இவர்களைத் தவிர்த்து இந்தியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட்டில் 140 ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 7 இடத்தையும், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 3 இடங்கள் சரிந்து 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் | ஓவியர், பாடகர், எழுத்தாளர்..! சச்சினின் தூக்கத்தை கெடுத்த பௌலரின் புதிய பரிணாமம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com