துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இந்தத் தொடரில் நான் தேவைப்படாவிட்டால் விலகிக் கொள்கிறேன்: அஸ்வின்

தமிழக வீரர் ரவி அஸ்வின் ஓய்வுக்கு இந்திய அணியின் தேர்வர்கள்தான் காரணமென கூறப்படுகிறது.

News image

ரோஹித் சர்மா, அஸ்வின் - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Updated On :18 டிசம்பர் 2024, 4:16 pm IST

இந்தியாவின் ஆல்ரவுண்டர் தமிழகத்தைச் சேர்ந்த ரவி அஸ்வின் பார்டர் - கவாஸ்கர் தொடரில் தான் தேவையில்லை எனில் விலகிக் கொள்வதாக ரோஹித் சர்மாவிடம் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்ததும், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து உடன் இந்தியா 0-3 என தோல்வியுற்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

”தேர்வுக்குழுவினால் அஸ்வின் நீக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட் அவர். அவரது முடிவினை அவரே எடுத்திருக்கிறார்” என பிசிசிஐ மூத்த உறுப்பினர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன?

இந்திய அணி அடுத்து ஜூன் - ஆக. இங்கிலாந்துடன் விளையாடுகிறது. சொந்த மண்ணில் அடுத்து அக்.- நவ. இல் விளையாடுகிறது. இடையில் 10 மாதங்கள் இருக்கின்றன.

இதற்கடுத்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027-க்கான போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

முதல் டெஸ்ட்டில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். அதனால், அஸ்வின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

ரோஹித் சர்மாதான் அஸ்வினிடம் பேசி ஃபிங்க் பந்து டெஸ்ட் விளையாட கூறியதாக பத்த்ரிகையாளர் சந்திப்பில் ரோஹித் பேசியிருந்தார்.

ரோஹித் சர்மா கூறியதென்ன:

நான் பெர்த் வந்ததும் அஸ்வின் இதுகுறித்து பேசினார். நான்தான் அவரை பிங்க் பந்து கிரிக்கெட் வரை ஆடுங்கள் என்று கூறினேன். அஸ்வின் என்னிடம் நான் இந்தத் தொடரில் தேவைப்படவில்லை எனில் விலகிக் கொள்கிறேன் என்றார்.

அஸ்வின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அவரை மாதிரியான ஒரு வீரர் நமக்கு எப்போதும் தேவை. இந்த முடிவினை அவரே எடுத்துள்ளார்.

இது குறித்து அஸ்வின் நிச்சயமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.