நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

2 ஆண்டுகளில் 4 போட்டிகள் மட்டுமே... விரக்தியாக இருக்கிறது! ஹேசில்வுட் பேட்டி!

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிஜிடி தொடரில் இருந்து விலகியது விரக்தியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

News image

ஜோஷ் ஹேசில்வுட்

படம்: ஏபி

Updated On :19 டிசம்பர் 2024, 10:31 am

DIN

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் முழங்கால் காயத்தால் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகியது விரக்தியாக இருப்பதாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

3 போட்டிகள் முடிந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. அடுத்த போட்டி டிச.26ஆம் தேதி தொடங்குகிறது.

காயம் காரணமாக ஹேசில்வுட் 2021- 2023 இல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறும் இலங்கை உடனான தொடரில் விளையாடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹேசில்வுட்.

விரக்தியாக இருக்கிறது

பிரிஸ்பேனில் ஏற்பட்ட காயத்தினால் தொடரிலிருந்து விலகியது குறித்து சேனல் செவனுக்கு அளித்த பேட்டியில் ஹேசில்வுட் கூறியதாவது:

நிஜமாகவே விரக்தியாக இருக்கிறது. டெஸ்ட்டில் விளையாட அனைத்து கட்டங்களையும் சரியாக நிரப்பி வந்தேன். மீண்டும் என்னாலே இந்த காயம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், இது தொடர்பின்றி உருவான பின்கால் தசைப் பிடிப்பாக இருக்குமென நினைக்கிறேன். நிச்சயமாக பிரச்னையென்ன என்பதை ஆழகாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

எனக்கு முழங்கால் தசைப்பிடிப்பு, சைடு ஸ்டிரைன் (பக்க தசை திரிபு) என்ற 2 பிரச்னைகள் பலகாலமாக இருந்து வருகின்றன. முக்கியமாக 4 வருடங்களில் இது பல தொடர்களில் இருந்து வெளியேற்றுகிறது. இருப்பினும் உடற்பயிற்சி கூடத்தில் சென்று இதை சரியாக்குவேன்.

அடுத்த இலக்கு இலங்கை தொடர்

கடைசி 12 மாதங்களில் பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறேன். இது வெறுமனே 2-3 வாரங்களுக்கான காயம். ஆனால், இதனால் மிகப்பெரிய போட்டிகளை இழப்பது விரக்தியாக இருக்கிறது.

அடுத்து இலங்கை தொடரில் விளையாடுவதுதான் திட்டம். அதனால், அடுத்த சில வாரங்களுக்கு எதுவும் அவசரப்படுத்தாமல் இருக்க வேண்டும். இன்னும் சில நாள்கள் அங்குமிங்குமாக சில விஷயங்களை செய்து எல்லாவற்றையும் சரியாக்க வேண்டும் என்றார்.

33 வயதாகும் ஹேசில்வுட் 72 டெஸ்ட் போட்டிகளில் 279 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.