ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! நடுவரை சாடும் இந்தியர்கள்!

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பில் சர்ச்சை. - படங்கள்: எக்ஸ் / 7கிரிக்கெட்

Published On :

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

 இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் வரிசையாக அவுட்டாகியுள்ளனர்.

தற்போது, 37 ஓவர்களில் 93/6 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது இந்திய அணி.

இதில் சிறப்பாக விளையாடிவந்த கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தது நடுவரின் தவறான முடிவென இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

22.2 ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கே.எல்.ராகுல் (74 பந்தில் 24 ரன்கள்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். கள நடுவர் அவுட் கொடுக்காமல் டிஆர்எஸ் எடுத்து மூன்றாம் நடுவர் கொடுத்த விக்கெட். இதில் ராகுல் பேட்டில் பந்து படவில்லை, காலுறையில் பேட் படும் சப்தம்தான் அது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஹைடன், “பேட்டை பந்து கடக்கும்போது பேட்டுடன் (Bat) காலில் கட்டப்பட்டுள்ள பேட் (pad)தொடவில்லை. அதனால் அது நிச்சயமாக பேட்டில்தான் (bat) பட்டிருக்கும்” என்றார்.

முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “இது என்ன மாதிரியான முடிவு? இது நகைச்சுவை அல்ல” எனக் கோபமாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.