மீண்டும் மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வழக்கம்போல் 4ஆவது பேட்டராக களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலிய அணியின் பேட்டர் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வழக்கம்போல் 4ஆவது பேட்டராக களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அணியின் தொடக்க வீரராக இருந்த டேவிட் வார்னர் ஓய்வுபெற்றதை அடுத்து, 4ஆம் இடத்திலிருந்த ஸ்டீவ் ஸ்மித் தனது விருப்பத்தின் பேரில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவரது இடம் கேமரூன் கிரீனுக்கு வழங்கப்பட்டது.
எனினும் சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அந்த இடத்தில் அவரால் திறம்பட செயல்பட முடியாமல் போனதை அடுத்து, மீண்டும் 4ஆவது இடத்துக்கே திரும்ப அவர் விரும்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவருக்கு மிடில் ஆர்டரில் இடம் ஒதுக்கப்பட்டது. அவருக்கான இடம் தற்போது அறிவிக்கப்படாவிட்டாலும், அவர் 4ஆவது வீரராக பேட் செய்ய வருவார் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை தொடங்கும் வலுவான பேட்டர், ஆஸ்திரேலிய "ஏ' அணியிலிருந்து தேர்வு செய்யப்படவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...