விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குர்பாஸ், ஒமர்ஜாய் அதிரடி: தெ.ஆ.வுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்!

தென்னாப்பிரிக்காவுக்கு ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
ரஹ்மானுல்லா குர்பாஸ்
Updated On :20 செப்டம்பர் 2024, 4:10 pm

DIN

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

முதலாவது போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியானது கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாத்தில் மண்ணைக் கவ்வியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹாஸ்மத்துல்லா ஷாஹிடி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Story image

அதன்படி ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் ரியாஸ் ஹாசன் இருவரும் களமிறங்கினர்.

ஆரம்பத்திலிருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியாஸ் ஹாசன் அணியின் ஸ்கோர் 88 ஆக இருந்தபோது 29 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். குர்பாஸுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த ரஹமத் ஷா அரைசதம் விளாசி 50 ரன்னில் வெளியேறினார்.

தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே போக்குக்காட்டிய குர்பாஸ் 105 ரன்னில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.

அவருக்குப் பின்னர் வந்த ஒமர்ஜாய் அதிரடியாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். தென்னாப்பிரிக்க பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் விளாசி அனைவரையும் வியக்கவைத்தார்.

அதிரடி காட்டிய ஒமர்ஜாய் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளுடன் 86 ரன்களும், ரஷித் கான் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் லுன்கி இங்கிடி, பர்கர், பீட்டர், மார்க்ரம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பேட்டிங்கில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி பவுலிங்கிலும் அசத்தி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றால் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.