முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+, ஷ்ரேயாஸ் உள்ளே, இஷான் வெளியே?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்தம் குறித்து...

இந்திய வீரர்கள். - படம்: பிசிசிஐ

Published On :

டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024-25ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்டார். அதில் கடைசியில் சேர்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தியும் அசத்தலாக விளையாடினார்.

புதியவர்களுக்கு வாய்ப்பு?

வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் ரெட்டி, அபிஷேக் சர்மா கடந்த 12 மாதங்களாக சிறப்பாக விளையாடியுள்ளதால் அவர்களுக்கு முதல்முறையாக பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஐஏஎன்எஸுக்கு கிடைத்த தகவலின்படி:

ஏ+ தரத்தில் கோலி, ரோஹித்

ஓய்வு பெற்றாலும் ரோஹித், கோலி ஏ+ தரத்திலான ஒப்பந்தத்தில் நீடிக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் மீண்டும் தேர்வாகவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய அக்‌ஷர் படேலுக்கு கூடுதல் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு எப்போது?

கடந்த வாரம் மகளிர் அணிக்கான தக்கவைப்பு பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.

தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ஆடவர் அணிக்கான ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை குவஹாட்டியில் கலந்தாலோசிக்க இருந்தது தள்ளிவைக்கப்பட்டதாக ஐஏஎன்எஸ் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

ஐபிஎல் முடிந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் ஜூன்20 முதல் இந்தியா விளையாடவிருக்கிறது. கடைசியாக டெஸ்ட்டில் இங்கிலாந்தில் 2007இல் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.