இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக இளம் வீரர் ஹாரி புரூக் நியமிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், ஒருநாள் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள், டி20 தொடர்களில் டி 20 தொடரை 1-4 என்றும், ஒருநாள் தொடரை முழுமையாகவும் இங்கிலாந்து அணி இழந்தது. இதனால், தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜோஸ் பட்லர் தெரிவித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு அணியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் தோல்வியைத் தழுவியது.
இதனால், டி20 அணியின் கேப்டனாக இளம் வீரர் ஹாரி புரூக் விரைவில் நியமிக்கப்படலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ தெரிவித்திருக்கிறார்.
26 வயதான ஹாரி புரூக் கடந்தாண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தலைமைத் தாங்கியிருந்தார். மேலும், இந்தியா - இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு அவர் இங்கிலாந்து அணியை வழிநடத்துவார்.
பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் அணிக்குத் திரும்பாத பட்சத்தில் ஹாரி புரூக்கே ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஜெட்டா நகரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை, தில்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.6.25 கோடிக்கு எடுத்தது. இருப்பினும், ஐபிஎல் தொடரில் இருந்து புரூக் பாதியில் விலகினார். இதனால், அவர் ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசத்தை வென்றது இலங்கை

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

எனது கேப்டன்சி பயணத்தில் கடைசி 3 மாதங்கள் மிகவும் கடினமானவை: பென் ஸ்டோக்ஸ்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


