திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகிறார்.

News image

ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ

Updated On :2 ஆகஸ்ட் 2025, 9:49 pm IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (ஆகஸ்ட் 2) இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் 66 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்திய அணி 330 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

ஓவலில் ரோஹித் சர்மா

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியைக் காண டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நேரில் வந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசிப் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளிக்கும் புகைப்படங்களை பிசிசிஐ அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Rohit Sharma is watching the final Test match between India and England in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.