மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மீண்டும் ஒரு தலைசிறந்த கேட்ச்..! ஸ்டீவ் ஸ்மித்தின் விடியோ!

ஆஸி. டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டுமொரு அசத்தலான கேட்ச் பிடித்துள்ளார்.

ஸ்மித்தின் மீண்டும் ஒரு தலைசிறந்த கேட்ச். - படங்கள்: எக்ஸ் / 7கிரிக்கெட்

Published On :8 பிப்ரவரி 2025, 4:05 pm IST

ஆஸி. டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டுமொரு அசத்தலான கேட்ச் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 2 கேட்ச்சுகள் பிடித்ததன் மூலமாக 197 கேட்ச்சுகளுடன் ரிக்கி பாண்டிங்கை முந்தினார்.

தற்போது, 2ஆவது இன்னிங்ஸிலும் ஸ்லிப்பில் நின்று தலைசிறந்த ஒரு கேட்ச்சை பிடித்துள்ளார். வர்ணனையாளர்கள் மிகவும் பாராட்டி வருகிறார்கள்.

ஆஸி., கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விடியோவை பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகளில் ஆஸி. வீரர்களில் முதலிடம் பிடித்த ஸ்டீவ் ஸ்மித் உலக அளவில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

3 கேட்ச்சுகளை தாண்டினால் 4ஆவது இடத்தையும் 13 கேட்ச்சுகளை தாண்டினால் முதல் இடத்தையும் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. வீரர்களில் டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகள்

1. ஸ்டீவ் ஸ்மித் - 198

2. ரிக்கி பாண்டிங் - 196

3. மார்க் வாக் - 181

4. மார்க் டெய்லர் -157

5. ஆலன் பார்டர் - 156

உலக அளவில் டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகள்

1. ராகுல் திராவிட் - 210

2. ஜோ ரூட் - 207

3. ஜெயவர்தனே - 205

4. ஜாக்ஸ் காலிஸ் -200

5. ஸ்டீவ் ஸ்மித் -198

6. ரிக்கி பாண்டிங் - 196

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.