2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் ஆட விரும்பும் ஸ்டீவ் ஸ்மித்!

2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் ஆட விரும்புவதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்
Published on
Updated on
1 min read

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் விளையாட விரும்புவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-1 என்ற கணக்கில் வென்று ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியது.

900 நாள்களுக்கும் மேலாக சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறிவந்த ஸ்டீவ் ஸ்மித் 2 சதங்கள் விளாசி அசத்தினார். மேலும், இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் புணே அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட ஸ்மித், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனார். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் லீக்கில் விளையாடி வருகிறார். ஸ்டீவ் ஸ்மித் பெர்த் அணிக்கு எதிரான போட்டியில் 121* ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 இதையும் படிங்க | சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

பிக்பாஸ் லீக் தொடரின் போது செய்தியாளர் சந்திப்பில் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், “2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கும் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். அது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு தூரம் செல்கிறேன் என்று பார்ப்போம். குறுகிய வடிவங்களான டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். எப்போது முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்குத் தெரியாது” என்றார்.

சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித் 67 போட்டிகளில் விளையாடி 1094 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை 2 டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

 இதையும் படிங்க | பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com