/

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்த ஸ்ரேயாஸ் ஐயர் (விடியோ)

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக தன்னை தேர்ந்தெடுத்ததற்கு அணி நிர்வாகத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயர் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
ஸ்ரேயாஸ் ஐயர்- படம் | பஞ்சாப் கிங்ஸ்
Updated On :13 ஜனவரி 2025, 12:16 pm

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக தன்னை தேர்ந்தெடுத்ததற்கு அணி நிர்வாகத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் துபையில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிகத் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக மாறினார். அவர் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

நன்றி தெரிவித்த ஸ்ரேயாஸ் ஐயர்

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தன் மீது நம்பிக்கை வைத்து அணியின் கேப்டனாக தேர்ந்தெடுத்ததற்கு ரசிகர்கள், அணியின் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் நன்றி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அணியின் கேப்டனாக என் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்கள், அணியின் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக அணி எப்படி செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியும். இந்த முறை எங்களது ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்து முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவோம்.

அணியின் நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு வலிமையான அணியை கட்டமைத்துள்ளனர். அணியில் மூத்த மற்றும் இளம் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் தங்களுக்குள் நிறைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர். ஏற்கனவே, பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். மீண்டும் அவருடன் இணைந்து செயல்படவுள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.