சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

"அருமையான அணி...” பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை பிசிசிஐ-க்கு பாராட்டு!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பிசிசிஐ மிகவும் சிறப்பான அணியை அறிவித்துள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை பிசிசிஐ-யை பாராட்டியுள்ளார்.

News image

கேப்டன் ரோஹித் சர்மா, அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்

Updated On :18 ஜனவரி 2025, 6:05 pm IST

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பிசிசிஐ மிகவும் சிறப்பான அணியை அறிவித்துள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை பிசிசிஐ-யை பாராட்டியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கிட்டத்தட்ட அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்ட நிலையில், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்தது.

பிசிசிஐ-க்கு பாராட்டு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக மிகவும் சிறப்பான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பிசிசிஐ-யை பாராட்டியுள்ளார்.

யோக்ராஜ் சிங் (கோப்புப் படம்)

யோக்ராஜ் சிங் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்களையும், பிசிசிஐயையும் பாராட்ட விரும்புகிறேன். இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அணியைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் சரியான வீரர்களை அணிக்குத் தேர்வு செய்துள்ளார்கள். ரோஹித் சர்மா கேப்டனாக அணியை வழிநடத்த, ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில், எதிர்காலத்தில் ஷுப்மன் கில் அணியை வழிநடத்த அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவது அவருக்கு உதவியாக இருக்கும்.

இதுவே சரியான அணுகுமுறை. வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்திய அணிக்காக மிகப் பெரிய வீரராக உருவெடுக்கவுள்ள அபிஷேக் சர்மா, சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில், இந்த தொடர், அவர் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்சித் ராணா (இங்கிலாந்து தொடருக்கு மட்டும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.