ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 22) அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் வருகிற மே 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை ஷாகின் ஷா அஃப்ரிடி கேப்டனாக வழிநடத்துகிறார். மூத்த வீரர் பாபர் அசாம், ஆல்ரவுண்டர் ஷதாப் கான் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
முகமது ரிஸ்வான், ஃபாஹிம் அஷ்ரஃப், ஃபைசல் அக்ரம், முகமது வாசிம் ஜூனியர் உள்பட வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற 6 பேர் ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயுப் அணியில் இடம்பெற முடியவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
ஷாகின் ஷா அஃப்ரிடி (கேப்டன்), சல்மான் அலி அகா (துணைக் கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, அகமது டேனியல், அராஃபாத் மின்ஹாஸ், பாபர் அசாம், ஹாரிஸ் ரௌஃப், மாக் சதாகத், காஸி கோரி, நசீம் ஷா, சோஹைல் நசீர், ஷகிப்ஸதா ஃபர்கான், ஷதாப் கான், ஷமில் ஹுசைன், சூஃபியான் முகிம்.
Summary
The Pakistan Cricket Board today announced the Pakistan squad for the ODI series against Australia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











